காணித் தேக்கு - காலச்சித்தன்

"காணித் தேக்கு"
ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரங்களும் என்னைக் கோபப்படுத்தியும், வரியின் அடுத்த எழுத்தே தெரிந்திராத அளவுக்குக் கண்களில் நீர் தேங்கி 'ஓ' என அழச்செய்தும், சிந்தித்து 'ஹாஹா' எனச் சிரிக்க வைத்தும், உவமைகளை 'அடடே' என்றவாறே புத்தகத்தைப் படித்து முடித்தேன்.

"ஆராயி" அவள்தான் எத்தனை குழப்பம் அடைந்திருந்தாள் யாரை நம்புவது, நம்பாமல் இருப்பதென்று. இந்த சாதிக் கட்டமைப்புகளில் பிடிபட்டிருக்கும் மக்களை "யான காலுல சிக்கின மண்ணாங்கட்டியா......" என்ற வரி உறக்கம் கலைப்பதாக இருத்தது...

"பிணை" சிறுகதையின், கருத்துப்போன கொலுசு, எனக்குப் பெருமூச்சு இறைக்கச் செய்தது...

காணித் தேக்கில் ஆங்காங்கே தென்பட்ட பட்டு ரோசா ஆசுவாசம் தந்தாள். அலங்காரம், முகிலன் பாத்திரங்கள் எத்தனை அழகாகப் பகுத்தறிவோடு
சூழ்நிலைகளைக் பக்குவாமாய் கையாண்டிருக்கிறார்கள் என்று வியந்து போனேன்.

சாமானிய மக்களின் வாழ்க்கை, இளைய தலைமுறையினர் மீதுதான சமூகத்தின் அழுத்தம், எளியோர்க்கு மூடப்பட்டே இருக்கும் சட்டங்களின் கதவுகள், மத போதை, அரசியல் போன்ற சமகாலத்துக் கருத்துகளை இப்பத்து சிறுகதைகளும் புட்டு புட்டு வைக்கின்றன. ஆகமொத்தம் அறிவுக்கு அறுசுவையும் கொண்ட ராஜ விருந்தாக "காணித் தேக்கு" இருந்தது.

சமகாலத்தைத் தத்ரூபமாக எழுத்தில் பதித்துப் படிக்கத் தந்த காலச்சித்தன் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துகளும்💐
உங்களின் அடுத்த புத்தகம் எப்படி இருக்கப்போகிறது என்ற ஆர்வம் கூடியிருக்கிறது...

Book Name: காணித்தேக்கு
Book Availability: Common folks 

Comments